Semmani

Video of the Day

Latest Post

Wednesday, September 9, 2020

0

100-வது சர்வதேச கோல் அடித்து ரொனால்டோ சாதனை

 ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. 


இதில் குரூப்3-ல் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி சோல்னா நகரில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் உள்ளூர் அணியான சுவீடனை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.


 இரு கோல்களையும் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ (45-வது மற்றும் 72-வது நிமிடம்) அடித்தார். ‘பிரிகிக்’ வாய்ப்பில் முதலாவது கோலை அடித்த போது அவரது ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100-ஐ (165 ஆட்டம்) தொட்டது. 


இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஐரோப்பிய வீரர் என்ற மகத்தான சாதனையை 35 வயதான ரொனால்டோ படைத்தார். உலக அளவில் ஈரான் முன்னாள் வீரர் அலி டாய் 109 கோல்கள் அடித்ததே சாதனையாக உள்ளது. 


இதையும் ரொனால்டோ விரைவில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Friday, May 8, 2020

0

விவசாய உற்பத்திகளுக்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுங்கள் - அரசிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் கோரிக்கை.!!!

விவசாய உற்பத்திகளுக்கு  நியாயமான விலையை பெற்றுக்கொடுங்கள் - அரசிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் கோரிக்கை.!!!

வடக்கு மாகாணத்தில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த  முடியாது அநியாய விலைக்கு விற்பனை செய்யும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார். கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அரசின் உயர் மட்டத்தின் கவனத்திற்கு நேரடியாக தெரியப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் தெரிவித்ததாவது,

வடக்கில் குறிப்பாக கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை  சந்தைப்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும், இதனால் தாங்கள்  மிக மிக குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எனது கவனத்திற்குகொண்டு வந்தனர். ஊரடங்குச் சட்டம் காரணமாகவும், வெளிமாட்டங்களுக்கிடையேயான போக்குவரத்து கட்டுப்பாடுப்பாடுகள் காரணமாகவும் விவசாய உற்த்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அனைத்து விவசாயிகளும் தங்களது உற்பத்திப் பொருட்களை உற்பத்திச் செலவை கூட ஈடுசெய்ய முடியாத அளவில் விற்பனை செய்ய தள்ளப்பட்டுள்ளனர். எனவே அரசு உடனடியாக விவசாயிகளை காப்பாற்றும் வகையில் நியாயமான விலை நிர்ணயத்தை நடைமுறைப்படுத்தி உற்த்தியாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்

அதேபோன்றே கடற்றொழிலாளர்கள் ,நன்னீர் மீன் பிடிப்பாளர்களும் கடலுணவுப்பொருட்களை சந்தைப்படுத்துவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். எனவே இவர்களுக்கும்  நியாயத்தை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தான் அரசின் உயர் மட்டத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர்.Sunday, April 19, 2020

0

எமது வளங்களை பயன்படுத்தி வளமான எதிர்காலத்தை அமைப்போம்-சிவசக்தி ஆனந்தன்.!!!

எமது வளங்களை பயன்படுத்தி வளமான எதிர்காலத்தை அமைப்போம்-சிவசக்தி ஆனந்தன்.!!!

தாயகத்தில் தனித்துவமாக உள்ள வளங்களை பயன்படுத்தி எமக்கான வளமான எதிர்காலத்தினை அமைத்துக்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் பேதமின்றி திடசங்கற்படம் பூணவேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்; செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோன வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் உலகளாவிய ரீதியில் தீவிரமாகியுள்ள நிலையில் அதன் பாதிப்புக்கள் இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது.

ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா தொற்றாளர்களும், மரணங்களும் இலங்கையில் குறைவாக இருந்தாலும் அதனால் நாட்டின் ஒட்டுமொத்தமான  நிலைமையும் தலைகீழாக மாறியுள்ளது.

சுகாதார பிரிவினரின் தகவல்களின் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் நாட்டில் ஒரளவு நிலைமைகள் வழமைக்கு திரும்பினாலும், அன்றாட வாழ்வாதாரத்தினை நகர்த்திச் செல்வதில் பெரும் நெருக்கடியான நிலைமைகள் ஏற்படப்போகின்றமையை தவிர்க்க முடியாதவொரு சூழல் எழுந்துள்ளது.
போரின் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் எமது மக்களை மாறிமாறி ஆட்சிப்பீடத்தில் இருந்த அரசுகள் மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே நடத்தி வந்திருந்தன என்பதை வெளிப்படையான விடயமாகின்றது.

எமது மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்துமே கண்துடைப்பான நாடகங்களாகவே இருக்கையில் எமது மக்கள் தமது சொந்த முயற்சியில் வாழ்வியலில் மீண்டெழ ஆரம்பித்திருந்தனர்.

அவ்வாறான நிலையில்  உலகளாவிய தொற்றுநோயான கொரோனா மீண்டெழ ஆரம்பித்திருந்த எமது மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புரட்டிப்போட்டுள்ளது.

திறந்தபொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் அரசாங்கம் பின்பற்றிய இறக்குமதிகளை மட்டுமே மையப்படுத்திய பொருளாதாரத்தினால்; தற்போது பெரும் நெருக்கடிகள் எழுந்துள்ளதோடு சவால்கள் நிறைந்த எதிர்காலமொன்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாயக பூமி, காடுகளையும், களனிகளையும், நீர்நிலைகள் உள்ளிட்ட வளங்கள் நிறைந்தவையாக இருக்கின்றது.

இதனை நாம் அனைவரும் முதலில் மனதில் திடமாக நிறுத்திக்கொள்வதோடு உடனடியாக எமது வளங்களை மையப்படுத்தி எதிர்காலத்தினை திட்டமிடவேண்டிய கடப்பாட்டிற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

குறிப்பாக எமது பிரதேசத்தின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக 'சுயதேவை பொருளாதார' கொள்கைகளை மையப்படுத்திய திட்டங்களை உடன் பின்பற்றுவதே எமக்கும் எதிர்காலச் சந்ததியினரினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக இருக்கும்.

விசேடமாக, நெல் உற்பத்தி, மரக்கறி உற்பத்தி, நன்னீர், கடல் நீர் மீன்பிடி ஆகியவற்றை ஊக்குவிப்பது இன்றியமையாததாகின்றது.

அதுமட்டுமன்றி, அனைத்து தரப்பினரும் தமது வீடுகளில் வீட்டுத்தோட்டங்களை முன்னெடுப்பதும் அவசியமானதொரு செயற்பாடாகின்றது.

ஆகவே எமது மண்ணில் உள்ள வளங்களை சரியாக புரிந்து முறையாக பகிர்ந்து செயற்படுவதன் ஊடாக நாம் ஆட்சியாளர்களிடமோ, பிற தரப்பினர்களிடமோ தங்கி வாழும் சூழலிலிருந்து முற்றாக விடுபடுவதற்கான வழியை ஏற்படுத்துகின்றது.

கொரோனாவினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்கும் முகமாகவும் எமது எதிர்காலத்தினை நாமே வளமானதாக வகுத்துக்கொள்வதற்காகவும் தற்போதே தீர்க்கமாக முடிவெடுத்து  நடைமுறைச்சாத்தியமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது கட்டாயமாகின்றது என
தெரிவித்துள்ளார்.Saturday, April 11, 2020

0

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தமிழ் பெண்ணின் ஓவியம்.!!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தமிழ் பெண்ணின் ஓவியம்.!!!


நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து நாடெங்கும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டில் இருக்குமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் மக்கள் அனைவரும் தமது இல்லங்களில் இருந்து பல்வேறுபட்ட தமது கலைப் படைப்புக்களை  சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் இலங்கையின் தலைநகர் கொழும்பில் வசிக்கும் கணேசினி சிறிதரன் எனும் தமிழ் பெண் பேனா மூலம் ஓர் ஓவியத்தை வரைந்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருந்தார்.

இவ் ஓவியமானது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டதுடன் பலரதும் பாராட்டையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.Monday, March 9, 2020

0

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோநிலைய கொண்டிருப்பவர் சுமந்திரன் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு!!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோநிலைய கொண்டிருப்பவர் சுமந்திரன்  சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு!!

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பொது வெளியில் தெரிவித்த கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் இன விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய அத்தனை இயக்கங்களும் தமது உயிர்களை துச்சமென மதித்து போராட்டக் களம் புகுந்திருந்தனர்.

கால மாற்றங்களுக்கேற்ப ஆயுத இயக்கங்கள் ஆயுதப் போராட்ட வழியிலான தமது பயணங்களை மாற்றியமைத்து கொண்டன. இந்தப் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி வரையில் விடுதலைக்கான ஒரே வழியாக ஆயுதப் போராட்டத்தையே முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இது வரலாறாக இருக்க ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்று ஜனநாயக வழி வந்த அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பில் 2001ஆம் ஆண்டு தமிழின விடுதலைக்கான அரசியல் ரீதியான நகர்வினை ஆரம்பித்திருந்தன.

கடந்த கால கசப்புணர்வுகள் அனைத்தையும் மறந்து தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஏனைய விடுதலை இயக்கங்கள் கரம் கோர்த்து ஒன்றாக செயற்பட்டனர். சுமந்திரனின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களால் ஆயுதப்போராட்டத்திற்கு வந்த இயக்கங்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் பழைய கசப்பான சம்பவங்களை கிளறி விரிசல்களை ஏற்படுத்த பார்க்கின்றார்.

இவ்வாறிருக்க விடுதலைப்புலிகளுக்கு எதிரான மனோநிலையையும் கொள்கை ரீதியான முரண்பாடுகளையும் கொண்டிருக்கும் சுமந்திரன்  போர்ச்சூழல், நெருக்கடியான நிலைமைகள் அனைத்தும் நிறைவுக்கு வந்த பின்னரே அரசியலில் பிரவேசித்தார்.

ஆகவே, விடுதலைப் போராட்டத்தில்  வித்தாகியவர்களின் அர்ப்பணிப்பை இவர் உணர்ந்திருப்பதற்கு எந்த விதமாக வாய்ப்புக்களும் இல்லை. விடுதலை புலிகளுக்கு எதிரான தனது தனிப்பட்ட கருத்தியலை பொது வெளியில் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த விடுதலை இயக்கங்களையும் அகௌரவப்படுத்தியுள்ளார்.

அது மட்டுமன்றி கடந்த கால கசப்பான விடயங்களை மீட்டு உயிர்த் தியாகங்களைச் செய்த விடுதலை இயக்க நபர்களை கொச்சைப்படுத்தியுள்ளதுடன் சாதாரண பிரஜைகளாக சமூகத்தில் வாழும் அனைத்து போராளிகளுக்கும் மனக் கவலையை உருவாக்கியுள்ளார்.

ஆயுத விடுதலைப் போராட்டம் சம்பந்தமாக எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்துவதற்கு அருகதையற்ற இவர் விடுதலை இயக்கங்களை விமர்சிப்பதானது பௌத்த சிங்கள மேலாதிக்க தரப்புக்களின் கரங்களை பலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்தும் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.

ஆயுதப் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் செயற்பாடுகளை அக்கட்சியின் கத்துக்குட்டியாக இருக்கும் சுமந்திரன் போன்றவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தனது தனிப்பட்ட சிந்தனையில் விடுதலைப் புலிகளை எதிரிகளாகக் கொண்டிருக்கும் சுமந்திரன்,சம்பந்தன் போன்றவர்கள் அரசியலில் சுய இலாபத்தை ஈட்டுவதற்காக ஒட்டுமொத்த விடுதலை மறவர்கள் மீதும் சேறு பூசும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமந்திரனைப் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் அவர்களும் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் திரு பிரபாகரன் அவர்களையும் மிகமோசமான வார்த்தை பிரயோகங்களால் விமர்சித்தது மட்டுமன்றி கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை யென்பதை பகிரங்கமாக தெரிவித்து வந்திருக்கின்றார்.

ஆகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் கொடுரமானவர்கள் பயங்கரவாதிகள் என்று விமர்சித்துக்கொண்டு அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அவர்களது தியாகங்களை கொச்சைப் படுத்துபவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடைய போராளிகள்,மாவீரர் குடும்பங்கள்,பொது மக்கள் இவர்களுக்கு எவ்வாறு ஆதரவு வழங்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.Wednesday, March 4, 2020

0

04.03.2020 இன்றைய நாள் எப்படி.!!!

04.03.2020 இன்றைய நாள் எப்படி.!!!


மேஷம்:
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும்

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

ரிஷபம்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மிதுனம்:
இன்று நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. எடுத்த காரியங்களில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கடகம்:
இன்று முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள்  கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம்மம்:
இன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். சொல்வன்மை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்து நடப்பது நன்மை அளிக்கும்

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கன்னி:
இன்று குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற வர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்:
இன்று வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்:
இன்று எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

தனுசு:
இன்று தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மகரம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கும்பம்:
இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கபட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்:
இன்று நீங்கள் எதிர்ப்பவர்களை வெற்றி கொள்வீர்கள்.  பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6Tuesday, March 3, 2020

0

கொரோனா வைரஸின் தாக்கத்தால் தமிழ் வைத்தியர்களை நாடியுள்ள சீனா.!!!

கொரோனா வைரஸின் தாக்கத்தால் தமிழ் வைத்தியர்களை நாடியுள்ள சீனா.!!!

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரையும் அச்சுறுத்தி வருகிறது. அங்குள்ள மக்கள் நோய் தடுப்புக்காக தமிழர்களின் உணவான ரசம் சமைப்பது குறித்து அங்குள்ள தமிழ் மக்களிடம் கேட்டறிந்து உணவுடன் சேர்த்து வருகிறார்கள்.

நோய்களை கட்டுப்படுத்தும் மிளகு, சீரகம், பூண்டு உள்பட பல்வேறு மருத்துவ குணமுடைய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப் படும் ரசம் அங்குள்ள மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது பல நிறுவனங்கள், உணவுடன் ரசத்தை சேர்த்துசாப்பிடுங்கள் என்று அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளன.

கொரோனா வைரஸ் சித்தமருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என சித்த மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்தை சீனா வர அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

அலோபதி மருந்துகளை விட சித்தா மற்றும் ஆயுர்வேத, ஓமியோபதி மருந்துகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

நோயாளிகளிடையே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் சித்த மருத்துவ மருந்துகள் முன்னிலை வகிக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமாக, வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தியர்களின் உணவு வகையில் ஒன்றான ரசம் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் பூண்டு, மிளகு, சீரகம் உள்பட பல்வேறு மருத்துவ குணமுடைய மசாலா பொருட்கள் சேர்க்கப்படுவதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதாக சிங்கப்பூர் மக்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அறிந்த அங்குள்ள உணவுபொருட்கள் விற்பனை நிறுவனங்கள், பொதுமக்கள் உணவில் ரசம் அதிக அளவில் சேர்க்குமாறு விளம்பரப்படுத்தி வருகின்றன.பல இடங்களில் விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டு உள்ளன.

அதுபோன்ற விளம்பர பதாதைகளில், ‘இந்தியர்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தும் ரசத்துக்கு நோய் களை குணமாக்கும் சக்தி உள்ளது.

குறிப்பாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரசம் சாதமே வழங்கி வந்துள்ளனர். இதில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக ரசத்தில் சேர்க்கப்படும் பூண்டு, மிளகு, சீரகம் போன்ற மசாலா பொருட்களுக்கு மருத்துவ குணம் உள்ள நிலையில், உணவுடன்ரசம் சேர்த்துக் கொள்ளவும்” என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்புகள் காரணமாக, சிங்கப்பூர் மக்கள் அங்கு வசிக்கும் தமிழர்களிடம் ரசம் எப்படி சமைப்பது என்பதையும் கேட்டு அறிந்துகொண்டு, அதனை அருந்தி வருகின்றனர். பலசரக்கு அங்காடிகளில் ரசப்பொடிகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

பெரும்பாலோனோர் அசைவ உணவுகளை தவிர்த்து காய்கறிளையே சமைத்து உணவருந்தி வருகின்றனர். தங்களின் உணவுகளுடன் அன்றாடம் ரசம் சாப்பிடுவதையும் வாடிக்கையாகி வருகின்றனர்.Social Time

Google Plus
Follow Us
Pinterest
Follow Us

Subscribe to our newsletter

(Get fresh updates in your inbox. Unsubscribe at anytime)