யாழ்.மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கான தொகுதிகள் பங்கீடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று மாலை யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள கட்சியின் தலைமை செயலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் 7 வேட்பாளர்களும் புளொட் அமைப்பின் இருவருடன் ரெலோவைச் சேர்ந்த ஒருவருமாக கூட்டமைப்பின் 10 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும் அதற்கான பரப்புரைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது அதிக ஆசனங்களை பெறும் வகையில் செயல்படும் வழிவகைகளும் தற்போதைய கொரோனா அச்ச சூழலில் சுகாதார வழிவகைகளுடன் சந்திப்புக்களை மேற்கொள்வது தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ்.குலநாயகம் உள்ளிட்ட சில கட்சியின் மூத்த செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் தொகுதி ரீதியாக தேர்தலைக் கையாள்வதற்காக வேட்பாளர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதன்படி மாவை – தலைமை ஒருங்கிணைப்பு மற்றும் காங்கேசன்துறைத் தொகுதி

ஆ.ம. சுமந்திரன் – பருத்தித்துறைத்தொகுதி

வே. தபேந்திரன்- உடுப்பிட்டித்தொகுதி

சாவகச்சேரி – திருமதி இரவிராஜ் சசிகலா

த. சித்தார்த்தன் – மானிப்பாய்த் தொகுதி

ஆர்னோல்ட். – யாழ்ப்பாணம்

சரவணபவன் – வட்டுக்கோட்டை

கஜதீபன் – ஊர்காவற்துறை

சிறிதரன் – கிளிநொச்சி

குருசாமி – கோப்பாய்த் தொகுதி

இவர்களோடு கட்சித்தொண்டர்கள் , மன்றங்களின் உறுப்பினர்கள் இணைந்து வெற்றிக்கான வியூகங்களை வகுப்பர் என அறியப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*