முன்னிலை சோஷலிசக் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு இடைக்காலத் தடை

முன்னிலை சோஷலிசக் கட்சி கொழும்பு அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் அல்லது அருகில் நடாத்த திட்டமிட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டை நீதவான் நீதிமன்றால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொள்ளுபிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் கோட்டை நீதவான் நீதிமன்றில் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாக முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரதான செயலாளர் சேனாதீர குணதிலக மற்றும் அக்கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ ஆகியவர்கள் மற்றும் மேலும் சிலருக்கு எதிராக மற்றும் பொதுவாக பொதுமக்களுக்கு குறித்த தடையுத்தரவு வௌியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த உத்தரவை மீறுதல், இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 185 ன் படி தண்டனைக்குரிய குற்றம் என நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*