பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் சிறுமி கடத்தல் சம்பவம் முறியடிப்பு

திருகோணலை தலைமையகப் பொலிஸ் பிரிவில், பொது பஸ் தரிப்பிடத்தில் வைத்து தனது இரு பாட்டிகளோடு வந்த 08 வயது சிறுமி ஒருவரை கடத்த முயன்ற சம்பவம் தலையகப் பொலிஸார் உடனடியாக மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று (13) காலை 11,30 மணியளவில் திருகோணமலை பொது பஸ் தரிப்பிடத்தில் இடம் பெற்றுள்ளது.

தனது இரண்டு பாட்டிகளோடு வந்த இச் சிறுமி, ஒரு பாட்டியோடு பொது பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு பக்கத்தில் உள்ள பாமசி ஒன்றுக்கு மருந்து எடுப்பதற்குச் சென்றுள்ளார்.

அந்த நேரம் மருந்து எடுத்து கொண்டு வந்த போது இச் சிறுமியை காணாது பாட்டி ஒருவர் அழுது கொண்டிருந்தார்.

இதனையடுத்து தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, உடனடியாக செயல்பட்ட பொலிஸார் அப்பகுதில் உள்ள தேனீர் கடையில் உள்ள சிசிரீவி கெமரா மூலம் தகவலை பெற்று அவ் இளைஞனை தேடுதல் மேற்கொண்டனர்.

இச் சிறுமியை இவ் இளைஞன்பொது பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள டைக் வீதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு கொண்டு செல்லும் நோக்கோடு கூட்டிக் கொண்டு செல்லும் போது இவ் இளைஞரை தலைமையாகப் பொலிஸார் 40 நிமிடங்களுக்குள் கைது செய்தனர்.

திருகோணமலை நலாம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த (வயது -23) இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ் இளைஞர் இச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் நோக்கிலே இச் சிறுமி அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இச் சிறுமி திருகோணமலை முள்ளிப் பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர், இவரின் தாயார் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிபவரெனவும், தந்தை வெளி நாட்டிலிருந்து வருகை தந்து தற்போது கொரோனா முகாம் ஒன்றில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*