மரண அறிவித்தல் – அமரர் சுபாஜினி யோகேஸ்வரன்

Mrs Yogeswaran Subajine
Mrs Yogeswaran Subajine

யாழ். பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heidenheim ஐ வதிவிடமாகவும் கொண்ட தர்சிகா றேகன்ராஜ் அவர்கள் 20-05-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், ராசதுரை ராசமணி தம்பதிகள், பாலசிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும், ஜெயகுமார் பவானி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

பாலச்சந்திரன் மஞ்சுளா தம்பதிகளின் அன்பு மருமகளும், றேகன்ராஜ் அவர்களின் அன்பு மனைவியும், மெல்வின் அவர்களின் பாசமிகு தாயாரும்,

சைந்தன், சுகன்யா, டினுஜா, சாரங்கன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், அபிசா, அபிசாந் ஆகியோரின் அன்பு சித்தியும், குகன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

மதனகோபால், கேசவன் ஆகியோரின் அன்பு பெறா மகளும், ஞானம்பிகை, சலுஜா, கோமதி ஆகியோரின் அன்பு மருமகளும், ரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மருமகளும்,

வசந்தி, சுமதி, சாந்தி, மாலினி ஆகியோரின் அன்பு பெறா மகளும், ஜான்சி றேகா, றேகன் சாள்ஸி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பத்மபவன் அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும், கனிசா, பவிசியா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 29-05-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில்

Am Waldfriedhof, 89518 Heidenheim an der Brenz, Germany எனும் முகவரியில் அடக்க ஆராதனைகளின் பின்னர் உயிர்ப்பின் உறைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*