திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம், கோவிலில் நடக்கும் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது.

பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்கள் மட்டும் 6 அடி இடைவெளியில் தரிசனம் செய்யலாம். மேலும் திருப்பதி கோவிலில் தனிநபர் இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*