15.06.2020 இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Today-Rasi-Palan
Today-Rasi-Palan

மேஷம்: குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

ரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்கள் ஆலோசனையை குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்கள். பணவரவு உண்டு.

மிதுனம்: வாழ்க்கையின் சூட்சுமத்தைக் கற்றுக் கொள்வீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் வேலை வேகமெடுக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: புதிதாக வாகனம், மின்சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் உயரும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.

சிம்மம்: குடும்பத்தினருடன் அவ்வப்போது சண்டை, சச்சரவு, எதிலும் பிடிப்பற்ற போக்கு காணப்படும். உறவினரால் தர்மசங்கடமான சூழல்களில் சிக்குவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

கன்னி: உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பணவரவு உண்டு.

துலாம்: மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

விருச்சிகம்: பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். புது வாகனம் வாங்குவீர்கள்.

தனுசு: உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்.

மகரம்: பணவரவு திருப்தி தரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்கள் சிலரின் சுயரூபம் வெளிப்படும். சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

கும்பம்: நவீன ரக மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள், உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.

மீனம்: ஒருவித படபடப்பு, பயம், எதையோ இழந்ததைப் போன்ற கவலை வந்து செல்லும். எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் – மனைவி இடையே கருத்துமோதல் ஏற்படலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*